ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவ.30 ஆம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
”புயல் உருவாகாது “
இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகவில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வலுகுறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நாளைமறுநாள் ( நவ. 30) கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத்தின் தாழ்வு நிலை:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 5.30 மணிநேர அளவில் மையம் கொண்டது.
200 கி.மீ. இலங்கை திருகோணமலைக்கு வடகிழக்கேயும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 340 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கி.மீ தூரத்திலும் உள்ளது.
இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 29 காலை வரை ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அதன்பின், வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, 29ம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
தொடர்ந்து மேலும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30ம் தேதி காலை, காற்றின் வேகத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே, வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் 65 கிமீ வேகத்தில் வீசும் எனவும் வானிமை மையம் தெரிவித்துள்ளது.