சமந்தா


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும்  வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017-ஆம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.  நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் திருமணம் இந்திய சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


விவாகரத்து


தென் இந்திய சினிமாவின் புகழ்பெற்ற தம்பதிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக முடிவுசெய்து கொள்ளப்போவதாக பரஸ்பரம் முடிவு எடுத்து அதை அறிக்கையாக வெளியிட்டனர். அவர்களின் இந்த முடிவு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்திற்கான காரணத்தை இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.


அவர்களின் பிரிவுக்கு பல்வேறு விஷயங்கள் காரணங்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வந்தன. 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் ஐட்டம் பாடலான 'ஊ சொல்றியா மாமா...' பாடலுக்கு பயங்கரமாக  நடனமாடி இருந்தார் நடிகை சமந்தா. அதுதான் அவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சில செய்திகள் பரவின. இது தொடர்பாக சமந்தா அளித்த விளக்கத்தில்..


 "என்னுடைய விருப்பம் எது, வெறுப்பு எது என்பதை நான் புரிந்துகொள்ளாததுதான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். என்னுடைய பார்ட்னரின் தாக்கம் தான் அதில் அதிகமாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மோசமாக நேரத்தில் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்தபோதுதான் நான் தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றேன்" என்று கூறியுள்ளார்


மையோசிட்டிஸ்


இதனைத் தொடர்ந்து சமந்தா மையோசிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியான திரைப்பட தோல்விகள், உடல் நிலை காரணமாக சினிமாவில் இருந்து ஒரு வருட காலம் ஓய்வு எடுக்க இருப்பதாக சமந்தா தெரிவித்தார். தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வரும் சமந்தா பல்வேறு விமர்சனங்களையும் வசைகளைம் எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் சமந்தாவை மிகவும் கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்துள்ளதும், அதற்கு சமந்தா மிக பொறுமையாக பதிலளித்துள்ளதும் கவனம் பெற்றுள்ளது.


இவ்வளவு வெறுப்பு எதற்கு?




சமந்தாவின் பதிவில் கமெண்ட் செய்த நெட்டிசன் “நீங்கள் ஏன் உங்கள் கணவரை விட்டு பிரிந்தீர்கள். வாழ்க்கையில் தோற்ற ஒருவரிடம் இருந்து எனக்கு  அட்வைஸ் தேவையில்லை” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சமந்தா “இவ்வளவு வெறுப்பை உங்களிடம் உருவாக்கும் நோயிலிருந்து நீங்கள் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்