சமந்தா !
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அவ்வளவுதான்! சொல்லவா வேண்டும் நெட்டிசன்களுக்கு இருவரின் விவாகரத்து குறித்தும் பல விதமாக பேச தொடங்கிவிட்டனர். குறிப்பாக சமந்தாதான் அதிகமாக பாதிக்கப்பட்டார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத சமந்தா தனக்கு பிடித்தவற்றை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்.
கடுப்பான சமந்தா !
நாக சைத்தன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்று ஒரு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அது குறித்தான டாக் இணையதளங்களில் பகிரப்பட்டுதான் வருகிறது. அந்த வரிசையில் இணையதளம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை ரீ-ட்வீட் செய்த சமந்தா "கொஞ்சமாவது வளருங்களேன் " என திட்டியிடுக்கிறார். தனது ட்வீட்டில் அவர் கூறியதாவது " பெண் பற்றிய வதந்திகள் - உண்மையாக இருக்க வேண்டும்!!
பையன் மீது வதந்தி - பெண்ணால் விதைக்கப்பட்டது !!
வளருங்கள்.
எல்லாம் கடந்தாகிவிட்டது.
நீங்களும் முன்னேறுங்களேன்!
உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்... உங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துங்கள்.. move on!! என தெரிவித்துள்ளார்
செய்தியில் இருந்தது என்ன ?
சமந்தா ரீ-ட்வீட் செய்த செய்தியில் சமந்தாவின் பி.ஆர் குழுவிற்கும் நாக சைத்தன்யாவிற்கும் இடையில் மோதல் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. காரணம் சமந்தா - நாக சைத்தன்யா விவாகரத்திற்கு பிறகு , சமந்தா குறித்து அதிகமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியானது. இவை அனைத்தையும் நாக சைதன்யாதான் ஆள் வைத்து செய்திருக்கிறார் என்றும் இதனை கண்டுபிடித்த சமந்தாவின் பி.ஆர் குழுவினர் நாக சைதன்யாவை கேள்வி கேட்டதாகவும் , இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் விவாகரத்திற்கு பிறகு நாக சைத்தன்யாவும் சமந்தாவும் ஒருவரை ஒருவர் வசை பாடி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.