அண்மையில் விளம்பரப் படம் ஒன்றில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடித்த சமந்தா அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரன்வீரை ஸ்வீட்டஸ்ட் எவர் என்று பாராட்டியுள்ளார். அந்த இன்ஸ்டா போஸ்டில் ரன்வீர் சிங் தட் வாஸ் ஏ டிலைட் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தியில் ஓடிடியில் அறிமுகமான சமந்தா அதில் மெகா ஹிட் அடித்துவிட்டார். இதனால், அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் வருண் தவானுடன் அவர் என்ட்ரி கொடுப்பார் என்று பேசப்படுகிறது. பாலிவுட் வட்டாரத்தில் டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ள இந்த செய்தியை சமந்தாவோ, வருண் தவானோ இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்தி புதுசு அல்ல:
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழில் கடைசியாக விஜயை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கிய பிறகு இந்தியில் ஷாரூக்கானுடன் படம் இயக்கச் சென்றுவிட்டார். ஜவான் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. அடிபட்ட வீரனாக பயங்கரமான ஆயுதங்களுடன் கட்டுப்பாட்டு அறையில் முகம் முழுவுதும் காயத்திற்கு கட்டுபோடப்பட்டிருப்பது போன்று ஷாரூக்கான் டீசரில் காட்சி தருகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
இந்த நிலையில், ஜவான் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஜவான் படத்தில் நடிகர் ஷாரூக்கானுக்கு ஜோடியாக முதலில் நடிக்க சமந்தாவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்போது சமந்தா பல்வேறு சொந்த விவகாரங்கள் காரணமாக தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே நயன்தாராவிடம் கால்ஷீட் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள சமந்தா டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். அதுவும் காத்துவாக்குல ரெண்டு காதல் பட வெற்றிக்குப் பின்னர் அவர் கதீஜாவாக கொண்டாடப்படுகிறார்.
வீழ்ந்துவிடாத சமந்தா
நண்பர்களாக இருந்து, காதலர்களாக மாறி பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்ட காதல் தம்பதிகள்தான் சமந்தா - நாக சைதன்யா. இந்த ஜோடிகளுக்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் ஒருமனதாக விவாகரத்து செய்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை அவரை எவ்விதத்திலும் வீழ்த்திவிடவில்லை என்றே சொல்ல வேண்டும். புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் அவர் ரூ.5 கோடி சம்பளம் பெற்றார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சமந்தா வசம் தற்போது சாகுந்தலம், குஷி, யசோதா ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
தளபதி 67
எல்லாவற்றிற்கும் மேலாக, நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விக்ரம் படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் தளபதி 67 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது. இந்த நிலையில், தளபதி 67 படத்தின் நாயகியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிகர் விஜய்யுடன் தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். சமந்தா விஜய்யுடன் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டானவை என்பதால் இந்த வெற்றிக்கூட்டணி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
பாலிவுட் நடிகரான ரன்வீர், மொழித்தடைகள் இருந்தாலும் எல்லா கோலிவுட் ஸ்டார்ஸோடும் நட்பு பாராட்டுவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது