ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்கிறார். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடிகை சமந்தா முகம் காட்டும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்.மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் பதிவிட்டிருந்தனர்.
நடிகை சமந்தா கலந்து கொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி தசரா திருநாளின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டதாக சினிமா வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டிருந்தாலும், விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது.
சமூக வலைத்தளங்களை திறந்தாலே சமந்தா, நாக சைத்தன்யாவின் பிரிவு செய்தியாகவே உள்ளது. டோலிவுட்டின் Most Romantic Couples ஆக இருந்தவங்களுக்கு என்னதான் ஆச்சு ? ஏன் திடீரென இப்படி முடிவெடுத்துட்டாங்க என இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், வாசிக்க:
'விவாகரத்து பற்றி பேசுவது வருத்தமளிக்கிறது' - சமந்தா பற்றி வாய்திறந்த நாக சைதன்யா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.