விவாகரத்து அறிவிக்கப்பட்ட நிலையில் தன் மீதான தொடர் வதந்தி குறித்தும், தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகை சமந்தா உணர்ச்சிகரமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில்,


''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


 






முன்னதாக, நாக சைதன்யாவைப் பிரிந்ததாக அறிவித்த சமந்தா, நேற்று பதித்த அவரது இன்ஸ்டகிராம் போஸ்ட்டில் பழைய காதல், பழைய பாடல்கள் இவையெல்லாம் என வெள்ளை உடையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தார். இன்று காலை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ள ஒரு Quote கார்டில், “பெண்களை மட்டும் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தி, ஆண்களிடம் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளை வைக்கவில்லையென்றால், இந்த சமூகமே ஒழுக்கக்கேடானது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது” என்னும் ஃபரிடாவின் வாசகத்தைப் பகிர்ந்திருந்தார்


இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்கிறார். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடிகை சமந்தா முகம் காட்டும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.