டைகர் 3


மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில்  அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் நேற்று வெளியானது.


ஸ்பை யுனிவர்ஸ்


முன்னதாக ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது டைகர் 3 படத்திலும் இந்த மாதிரியான பல ரகசியங்களை வைத்திருக்கிறார்கள். பதான் படத்தில் இருந்து ஷாருக் கானும் வார் படத்தில் நடித்து நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் இந்தப் படத்தில் சிறப்புத் தொற்றத்தில் தோன்றியிருக்கிறார்கள். டைகர் 3 படத்திற்கு கிடைத்து வரும் பலத்த வரவேற்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 


தீபாவளியில் வசூல் சாதனை






 நேற்று ஒரு நாளில் மட்டுமே டைகர் 3 படம் இந்தி சினிமா வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தி சினிமாவில் இதுவரை வெளியானத் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டியப் படமாக டைகர் 3 படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில் ரூ 52.50 கோடியும் பிற நாடுகளில் ரூ 41. 50 கோடியும் வசூல் செய்து தீபாவளி நாளில் மட்டும் 94 கோடி வசூல் செய்துள்ளது டைகர் 3 . படத்தின் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இந்தத் தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். 


திரையரங்குகளில் பட்டாசு வெடித்து சர்ச்சை


ஒரு பக்கம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க. சல்மான் கானின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார்கள். திரையரங்கங்களில் பட்டாசுகளை வெடித்து மக்களை அவதிப்படுத்தியும் திரையரங்க இருக்கைகளில் நெருப்பு ஏற்படுத்தியும் செய்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த செயல்களுக்குப் பின் சல்மான் கான் ரசிகர் மன்றத்தில் பங்கு இருப்பதாகவும் தெரிய  வந்துள்ளது இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது. இந்த செயலுக்கு சல்மான்கான் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.