நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா? ஆம் எனில்,’ இந்த பிடிவாதமான தொப்பையை குறைப்பது எப்படி?’என்பதை அறிய விரும்புகிறீர்களா? எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், அது எப்படியோ போகாது என்று நினைப்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இதோ!


என்ன செய்தாலும் தொப்பை குறையில்லை என்பது மிகவும் எரிச்சலூட்டும், இல்லையா? வீட்டில் உள்ளவற்றை வைத்து உடல் எடையை குறைக்கலாம் என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதில், வெந்தயம், மஞ்சள் இந்த இரண்டுக்கும் இடமுண்டு.


தொப்பை கொழுப்பு:


இந்த இரண்டு பொருட்களும் சமையலில் சுவை அளிக்கின்றன. ஆனால் அவை அந்த தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?இவை இரண்டும் எடை இழப்பு மற்றும் தொப்பை கொழுப்புக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.


 உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ராவின் கூறுகையில், " வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இது இரத்ததில் உள்ள சர்க்கரையை மெதுவாக வெளியேற்ற உதவி புரியும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களையும், கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மாற்றத்தை காணலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை குறைக்கும்.” என்று சொல்கிறார்.


வெந்தையத்தை பொடியாகவோ, வெந்தய நீராகவோ செய்து சாப்பிடலாம். 


வெந்தயத்தின் நன்மைகள்:


வெந்தயம் உடலில் குளுக்கோஸ் இண்டாலரன்ஸ் மேம்படுத்த உதவுகிறது. இதோடு நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக உள்ளது.


இரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


வெந்தயம் சாப்பிடுவதால் பசி அதிகம் ஏற்படுவதோடு, தாய்ப்பால் சுரப்பதையும் அதிகரிக்கிறது.


உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது.


வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்க்கும்போது முடி உதிர்வதைத்தடுக்கிறது. முடி வளர்ச்சிக்கும், நரை முடியையும் கட்டுப்படுத்த உதவுகிறது. 


1-2 தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம்.  ஊறவைத்த நீரையும் பருகலாம்.


வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் 1 டீஸ்பூன் கலந்து பருகலாம்.


தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தயிர், கற்றாழை ஜெல் போன்றவற்றை சேர்த்து முடியும் தேய்த்துக்குளிக்கும் போது பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் இருக்காது.


இதோடு மட்டுமின்றி முகத்தில் கருவளையங்கள், முகப்பரு, முகப்பரு தழும்புகள் மற்றும்  சுருக்கங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ரோஸ் வாட்டருடன் வெந்தய பேஸ்டைப் பயன்படுத்தலாம்.


மஞ்சள்


"மஞ்சளில் குர்குமின் உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  உயர் இரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் குர்குமின் குறைக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.


வெந்தயம் - மஞ்சள் டீ


அடுப்பில், ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிநிலை வர விடுங்கள். இப்போது, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் /வெந்தய பொடி, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொடுத்தவிட்டு இறக்கி வடிகட்டினால் ரெடி. இதோடு, தேன் அல்லது வெல்ல சர்க்கரை சேர்க்கலாம்.