Tiger 3
மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில் தற்போது கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. டைகர் 3 படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து ட்விட்டரில் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.