தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது.


NED vs IND, WC 2023: சாம்பியன் டிராபிக்காக களமிறங்கும் நெதர்லாந்து.. கனவை உடைக்குமா இந்தியா.. இன்று மோதல்!


இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த  மாத ஆரம்பத்திலிருந்தே பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதனால் கடந்த 2ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனத்துறை சார்பாக அறிவிப்பு பெளியானது. இந்நிலையில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீரின் அளவு குறைந்து நீர் வரத்து சீராகாத நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்றுவரையில் 10 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்வதாக தேவதானப்பட்டி  வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதே போல் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாத்தளமாக அமைந்துள்ளது சுருளி அருவி. பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், ஆனந்த குளியிடும்போது போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 40 அடி உயரம் கொண்ட இந்த அருவி வனப்பகுதியிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் தொடர் கனமழையும் பெய்து வருகிறது. சுருளி அருவியில்  இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி..விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் என்ற கமல்..!


சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் தூவானம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடுமையான தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் போல் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.



அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சென்ற 8ம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரையில் சுமார் 5 வது நாளாக க அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது. இன்று தீபாவளி கொண்டாடவும் வார விடுமுறை நாளான இன்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.