தனது பிறந்தநாளுக்கு முன்னதாக, சல்மான் கான் தனது பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது.  உடனே, சல்மான் கான் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, நேற்று காலை 9 மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு, சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு  வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 


சல்மான்கானை பாம்பு கடித்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அது விஷமற்ற பாம்பு என்று தெரியவந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் நார்மல் மோடிற்கு வந்தனர். இந்நிலையில் பாம்பு கடித்த சம்பவம் குறித்தும் என்ன நடந்தது எனவும் சல்மான்கான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பாம்பு கடித்த சம்பவம் என் அப்பாவுக்கு தெரிந்ததும் அவர் எனக்கு போன் செய்தார். பாம்பு உயிரோடு இருக்கிறதா என்று கேட்டார். நான் டைகரும் புலியும் உயிரோடு இருக்கிறோம் என்றேன். (சல்மான்கானை செல்லமாக டைகர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள்). பாம்பை அடித்தீர்களா என்று என் தந்தை கேட்டார்.  நாங்கள் எதுவும் காயப்படுத்தவில்லை. அந்த பாம்பை காட்டுக்குள் விட்டுவிட்டோம் என்றேன். 


siddhu | shreya | மனைவியின் பிறந்த நாளுக்கு சித்தார்த் கொடுத்த காஸ்ட்லி கார்: - வைரலாகும் வீடியோ!




O Antava mama | உலக அளவில் youtube தளத்தில் முதலிடம் பிடித்த சமந்தா பாடல்- விரைவில் 100 மில்லியனை எட்டும்!


பாம்பு அறைக்குள் வந்ததும் நான் ஒரு நீண்ட குச்சியை எடுத்து தூக்கி வெளியே விட்டுவிடலாம் என்று நினைத்தேன். என்னிடம் சிறிய குச்சிதான் இருந்தது. அதை வைத்து தூக்கினேன். அந்த பாம்பு அந்த குச்சி வழியாக சரசரவென மேலேறி என் கையருகே வந்துவிட்டது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் பாம்பு.. பாம்பு என கூச்சலிட்டார்கள். 


அந்த பாம்பு என்னை ஒருமுறை கடித்தது. மறுபடி அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிட்டல்.. ஹாஸ்பிட்டல் என கூச்சலிட்டனர். பாம்பு மீண்டு கடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனை விரைந்தோம். அது விஷப்பாம்பு இல்லை என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பும் பயந்து இருந்தது. அதனால் தான் என்னைக் கடித்தது என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண