கிருஷ்ணன் அவதார், அந்த், அண்டோலன், மாஃபியா உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி.
இவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சல்மான் கானும் 1991ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை காதலித்து வந்த நிலையில், தொடர்ந்து பிரேக் அப் செய்தனர்.
இந்நிலையில் முன்னதாக நடிகர் சல்மான் கான் ’பெண்களை அடிப்பவர்’ என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோமி அலி பகிர்ந்துள்ளார். இப்பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”சல்மான் கான் பெண்களை அடிப்பவர். என்னை மட்டுமல்ல, பல பெண்களையும் சல்மான் கான் அடித்துள்ளார். அவரை வழிபடுவதை ரசிகர்கள் தயவுசெய்து நிறுத்துங்கள். உங்களுக்கெல்லாம் தெரியாது அவர் ஒரு மிகப்பெரும் சாடிஸ்ட்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் தான் பகிர்ந்த பதிவை இன்ஸ்டாகிராமில் இருந்து சோமி அலி நீக்கியுள்ளார்.
முன்னதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சோமி அலி, தன் 17 வயதில் நடிகர் சல்மான் கானுடன் காதலில் விழுந்ததாகவும், அப்போது சல்மான் கான் தனக்கு காதலி இருப்பதாகக் கூறியதாகவும், தொடர்ந்து ஓராண்டு கழித்து சல்மானும் அவரை காதலிக்கத் தொடங்கி இருவரும் டேட்டிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய் தொடங்கி, கேத்ரினா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என பலருடனும் சல்மான் காதலில் இருந்துள்ளார். மேலும், இவர்களில் ஐஸ்வர்யா ராய் சல்மான் தன்னிடம் முரட்டுத் தனமாக நடந்துகொண்டதாக பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார்.
மேலும், கத்ரினா கைஃஃபிடமும் சல்மான் கான் ஏக் தா கபூர் படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!