தண்டேல் 


சந்து மொண்டெட்டி இயக்கத்தில் சாய் பல்லவி நாக சைதன்யா நடித்துள்ள படம் தண்டேல். தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து உண்மை சம்பவத்தை மையப்படுத்தி சாய் பல்லவி நடித்துள்ள மற்றொரு படம் தண்டேல். தமிழ் , தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம். 


தண்டேல் படத்தின் கதை


ஶ்ரீகாகுளம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜூ (நாக சைதன்யா). ராஜூ மற்றும் சத்யா (சாய் பல்லவி) இருவரும் காதலித்து வருகிறார். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது ராஜூவின் தொழில். வருடத்தில் பெரும்பாலான மாதங்களை கடலில் கழிக்கும் ராஜூ மிச்சமிருக்கும் கொஞ்ச நாட்களை தனது காதலியுடன் மகிழ்ச்சியாக செலவிடுகிறார். எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு நிகழ்விற்கு பின் ராஜூவை இனி கடலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ கடலுக்குள் செல்கிறான். கடலுக்குள் சென்ற ராஜூவின் குழு புயலில் மாட்டிக் கொள்கிறது. பின் பாகிஸ்தான் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் சந்தித்த கொடுமைகள் ஒருப்பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தனது காதலனை பிரிந்து இருக்கும் சத்யா எதிர்கொள்ளும் சவால்கள் என தொடர்கிறது படம். சத்யா மற்றும் ராஜூ இருவரும் சேர்ந்தார்களா என்பதே தண்டேல் படத்தின் கதை. 


தண்டேல் விமர்சனம்


தண்டேல் படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் படம் பற்றி பதிவிட்டு வருகிறார்கள். முதல் பாதியில் இடம்பெறும் ராஜூ மற்றும் சத்யா இடையிலான காதல் காட்சிகள் அழகாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடைந்து விடுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். ரொமான்ஸ் காட்சிகளை இயக்குநர் சிறப்பாக கையாண்டிருந்தாலும் இரண்டாம் பாதியில் தேசப்பற்று என வழக்கமான திரைக்கதை அமைத்துள்ளார் என படம் பற்றிய பெரும்பாலான விமர்சனங்கள் தெரிவித்துள்ளன. 


பாடல் , நடனம் , ரொமான்ஸ் காட்சிகள் இப்படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் சுமாரான திரைக்கதை படத்தின் பலவீனம்




மேலும் படிக்க : விடாமுயற்சி பற்றி முரட்டி விஜய் ரசிகர் ரத்னகுமார் பதிவு..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா


பணிவா இருக்க மாதிரி நடிப்பாங்க...என்ன நித்யா மேனன் இப்படி சொல்லிட்டார்