விடாமுயற்சி பற்றி முரட்டு விஜய் ரசிகர் ரத்னகுமார் பதிவு..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை திரைப்பட இயக்குநர் ரத்னகுமார் பாராட்டி பேசியுள்ளார்

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இரண்டு ஆண்டு காத்திருப்புக்குப் பின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அஜித்தின் ஸ்டார் அந்தஸ்த்திற்காக பண்ண படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் இப்படம் வெகுஜன ரசிகர்களை அந்த அளவிற்கு திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .
விடாமுயற்சி படம் சொல்ல வரும் மெசேஜ்
முழுமையான ஒரு படமாக விடாமுயற்சி வர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் பாராட்ட வேண்டிய நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன. அர்ஜூன் (அஜித்) மற்றும் கயல் (த்ரிஷா) இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜூனிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறாள் கயல். அவர் வேறு ஒருவரை காதலித்து வருகிறார். மனிதர்களாக நாம் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டிருப்பவர்கள். ஒருத்தரின் மீது நமக்கு இருந்த காதல் காலம் முழுவதும் இருக்கும் என்று சொல்லமுடியாது . அப்படி நாம் நேசித்தவர்கள் நம்மை விட்டு செல்ல விரும்பினால் அவரை அனுமதிப்பதே நாம் செய்ய வேண்டியது என்பதே இப்படம் பார்வையாளருக்கு சொல்ல வரும் மையக் கருத்தாக இருக்கிறது
Just In




படத்தில் தனது மனைவி இன்னொருவரை காதலிப்பதாக தெரிவிக்கும் போது அர்ஜூன் (அஜித்) அவளை திட்டுவதோ , அவமானப்படுத்துவதோ கிடையாது. வன்முறையை விரும்பாத மிக எளிமையான ஒரு கதாபாத்திரத்தில் தன்னை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். அஜித் மாதிரியான ஒரு பெரிய ஸ்டார் இந்த மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளதை பலர் பாராட்டி வருகிறார்கள்.
விடாமுயற்சி படத்தை பாராட்டிய ரத்னகுமார்
விடாமுயற்சி படம் சொதப்பியதில் பெரிய சந்தோஷன் விஜய் ரசிகர்களுக்கு தான். சமூக வலைதளங்களில் விடாமுயற்சி படத்தை ட்ரோல் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் முரட்டு விஜய் ரசிகர் ஒருவர் விடாமுயற்சி படத்தை பாராட்டியுள்ளார். மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தனக்கு ரொம்பவும் பிடித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் எப்போது தன் மனதிற்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.