Watch Video : இது சூப்பர்.. செம்ம ஆட்டம் போட்ட சாய் பல்லவி... தங்கை திருமணத்தில் கும்மாளம்தான்..

Watch video : நடிகை சாய் பல்லவி தன்னுடைய தங்கை திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டத்தில் மராட்டி பாடலுக்கு தங்கையுடன் சேர்ந்து உற்சாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. அவரின் எளிமை, அமைதி, அழகு, எதார்த்தமான நடிப்புக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்று இருக்கும் சாய் பல்லவி ஒரு தேர்ந்த டான்சர். 'ரவுடி பேபி...' பாடலுக்கு அவர் நடனமாடியதே அதற்கு சாட்சி.  அவருடைய தங்கை பூஜா கண்ணன் திருமண கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில் தங்கை திருமண விழா முன்னதான கொண்டாட்டத்தில் சாய் பல்லவி உற்சாகமாக நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்களின் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது தனது தங்கை பூஜா கண்ணனுடன் சேர்ந்து சாய் பல்லவி மிகவும் பிரபலமான மராட்டி பாடலான 'அப்சரா ஆலி' பாடலுக்கு மிகவும் உற்சாகத்துடன் மயக்கும் ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடிய முழு வீடியோவையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாய் பல்லவி. இந்த வீடியோ ட்ரெண்டிங்காகி வருவதுடன் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இது தவிர ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' படத்தில் சீதா தேவியாக நடிக்கிறார் நடிகை சாய் பல்லவி. இதில் சன்னி தியோல் ஹனுமானாகவும், ராவணனாக யஷும் நடிக்க பாபி தியோல் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கும்பகர்ணனாகவும், விபாஷணனாகவும் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த ராமாயண திரைப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola