Apple iPhone 16: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் அதன் விலை விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகம்:


ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ஐபோன் 16 ஐ புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது க்ளோடைம் நிகழ்ச்சியின் மூலம்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆக்க்ஷன் பட்டன்' அம்சத்துடன் புதிய மாடலை வெளியிட்டுள்ளட்து. ஐபோன் 16 ஏரோஸ்பேஸ் தர அலுமினியத்தைப் பயன்படுத்துகிறது. புதியதாக "அல்ட்ராமரைன்" "டீல்" மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ண வண்ண ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவானது 2,000 nits (நேரடி சூரிய ஒளியில்) மற்றும் 1 nit இடையே செல்ல கூடியது. ஆப்பிள் ஐபோன் 16 நீர் மற்றும் தூசி எதிர்ப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிளின் கூற்றுப்படி கண்ணாடி செராமிக் திரை கடந்த மாடலை விட 50 சதவிகிதம் கடினமானது மற்றும் "வேறு எந்த ஸ்மார்ட்போனையும்" விட இரண்டு மடங்கு வலிமையானது ஆகும்.


iPhone 16, iPhone Plus டிஸ்பிளே:


எதிர்பார்த்தபடியே, ஐபோன் 16 பேஸ் மற்றும் பிளஸ் மாடல்கள் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவில் உள்ளன.  இரண்டும் சாதனத்தின் இடது பக்கத்தில் அமைந்துள்ள புதிய தனிப்பயனாக்கக்கூடிய ஆக்‌ஷன் பட்டனைக் கொண்டிருக்கும். நாளின் நேரத்தைப் பொறுத்து பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய இந்த பட்டனை புரோகிராம் செய்யலாம். கூடுதலாக, இது ஒரு புதிய "கேமரா கட்டுப்பாடு" அம்சத்தையும் கொண்டுள்ளது.


iPhone 16, iPhone Plus விலைகள்:


ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸின் ஆரம்ப விலைகள் அமெரிக்காவில் மாறாமல் உள்ளன. iPhone 16 இன் ஆரம்ப விலை $799 மற்றும் iPhone 16 Plus $899 ஆகும்.


புதிய ஐபோன் 16 சீரிஸ் A18 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, A18 சிப் A16 Bionic இன் செயல்திறனை அப்படியே வழங்கும் அதே வேளையில், 30 சதவிகிதம் குறைவான சக்தியைப் பயன்படுத்துகிறது. இது டெஸ்க்டாப்-கிளாஸ் செயலிகளுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. GPU ஆனது கடந்த ஆண்டு ஐபோன் 15 ஐ விட 40 சதவிகிதம் வரை வேகமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் A16 Bionic ஐ விட 35 சதவிகிதம் குறைவான சக்தியைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.


ஐபோன் 16 கேமரா விவரங்கள்:


ஐபோன் 16 ஆனது 12MP 2x டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டுள்ளது. இதனால் அதன் புகைப்படம் எடுக்கும் திறன்களுக்கு சில கூடுதல் நெகிழ்வுத்தன்மையை பெற்றுள்ளது. பிரதான சென்சாரிலிருந்து டேட்டாவை இணைப்பதன் மூலம், ஆப்பிள் இந்த அமைப்பை 48MP 'ஃப்யூஷன்' கேமராவாகக் குறிப்பிடுகிறது. இது HDR ஆதரவுடன் 60fps இல் 4K வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது. சாதனத்தில் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. இது முதலில் குழப்பமாகத் தோன்றினாலும், இரட்டை லென்ஸ் அமைப்பில் மூன்று கேமராக்கள் இருப்பதாகத் தோன்றுவதால், முதல் இரண்டு லென்ஸ்கள் கீழ் வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.


iPhone 16 AAA கேம்களை இயக்கும் திறன்:


iPhone 16 ஆனது, Assassin's Creed Mirage மற்றும் Resident Evil போன்ற, ஐபோன் 15 ப்ரோவிற்கு பிரத்தியேகமானதாக இருந்த AAA கேம்களை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். டென்சென்ட்டின் ஹானர் ஆஃப் கிங்ஸ்: வேர்ல்ட் ஐபோன் 16 இல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.