சாய் அப்யங்கர்
பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகன் சாய் அப்யங்கர். 21 வயதாகும் இவர் சென்னை ஐஐடியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். தனது பெற்றோர்களைப் போலவே சாய் அப்யங்கர் இசையில் ஆர்வம் கொண்டவர். பாடல்கள் எழுதுவது , பாடுவது , இசையமைப்பது , ப்ரோகிராமிங் , என தொழில்நுட்ப ரீதியாகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்கள் முன்பு இவரது கட்சி சேர பாடல் வீடியோ வெளியானது. திங் மியூசிக் இந்தப் பாடலை வெளியிட்டது. பாட்டும் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க யூடியுபில் பல மில்லியன் பார்வையாளர்களை எட்டியது கட்சி சேர பாடல். இந்தப் பாடலைத் தொடர்ந்து ஆச கூட என்கிற பாடலை வெளியிட்டார் சாய். முதல் பாடலைப் போலவே இந்த பாடலும் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. மிக குறுகிற காலத்தில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ள சாய் விரைவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய் அப்யங்கர்
லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவின் பகுதியாக உருவாகி இருக்கும் படம் பென்ஸ். ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ரெமோ , சுல்தான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் மூலம் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்.சி.யு கதையுலகில் வெளியான படங்களில் இதுவரை அனிருத் மற்றும் சாம் சி.எஸ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளார்கள். தற்போது இதில் சாய் அப்யங்கர் இணைவது ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Guruprasad : கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட பிரபல கன்னட இயக்குநர்..அழுகிய நிலையில் உடல் மீட்பு