விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் உள்ளது - அஜித் பட நடிகை

வாழ்க்கையிலேயே இவ்வளவு அரசியல் நடந்து கொண்டிருக்கும் போது, அந்த அரசியல் மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் அது குறித்து யோசிக்கலாம்

Continues below advertisement

உலக ரேபிஸ் தினம்

Continues below advertisement

ஹெவன் பார் டாக்ஸ் எனும் அமைப்பு சார்பில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வானது சென்னை அண்ணா நகரில் உள்ள பூகேன்வில்லா பூங்காவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரைக் கலைஞர்கள் பார்வதி நாயர், சந்தோஷ், ஐஸ்வர்யா பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சாலையோரங்களில் இருக்க கூடிய நாய்களை பார்வதி நாயர் மற்றும் சில பிரபலங்கள் தத்தெடுத்தனர்.

தொடர்ந்து சாலையோரங்களில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ள வாகனங்களை பார்வதி நாயர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது ;

ஹெவன் பார் டாக்ஸ் எனும் அமைப்பு சார்பில் நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்தாண்டு 1001 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாய், பூனை போன்ற விலங்களுக்கு மக்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும். தெரு நாயிடம் நாம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறோம். அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

நான் பட்டாசு வெடிப்பதில்லை

தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் விலங்கு நல ஆர்வலரானதால் நான் பட்டாசுகள் வெடிப்பதில்லை. பட்டாசு வெடிப்பதால் நாய்கள் பயப்படுகின்றன மாசுபாடும் ஏற்படுகிறது அதனால் நான் வெடிப்பதில்லை. பட்டாசு வெடிப்பது தவறில்லை. ஆனால் அதனால் நாய்கள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுத்து விட்டு வெடிக்க வேண்டும்

விஜயின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு ,

விஜய் மிகச் சிறந்த நடிகர். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். கோட் திரைப்படத்தில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். அரசியலில் செயல்படும் திறன் அவருக்கு உள்ளது

அரசியல் குறித்து தற்போது நான் யோசிக்கவில்லை. வாழ்க்கையிலேயே இவ்வளவு அரசியல் நடந்து கொண்டிருக்கும்போது , அந்த அரசியல் மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் அது குறித்து யோசிக்கலாம் என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola