அறிவழகன் இயக்கத்தில் ஆதி பினிசெட்டி நடித்த சப்தம் திரைப்படம் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஈரம் படத்திற்குப் பிறகு ஆதி மற்றும் இயக்குனர் அறிவழகன்  இணையும் இந்த படத்திற்கான டிவிட்டர் விமர்சனத்தை இதில் காண்போம். 

ஈரம் திரைப்படம்: 

இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனரான அறிவழகன் ஈரம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். தண்ணீர் வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் த்ரில்லரான ஈரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது சிஷ்யனின் படத்தை சங்கரே தயாரித்து வெளியிட்டார். அதன் பிறகு தமிழ்ராக்கர்ஸ் என்கிற வெப் தொடரை எடுத்தார். அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

சப்தம்: 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆதியுடன் கைக்கோர்த்து சப்தம் என்கிற படத்தை இயக்கியுள்ளார், இந்த படத்தில் சவுண்டை வைத்து திகில் காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் அறிவழகன். இந்த படத்தில் ஆதி, லட்சுமி மேனன்  நடித்துள்ளனர். தமன் இந்த் படத்திற்கு இசையமைத்துள்ளர். இந்த படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை கீழே காண்போம். 

டிவிட்டர் விமர்சனம்: 

இந்த படத்திற்கு ஒரே வார்த்தையில் நல்ல படம் என்கிற விமர்சனம் அளித்துள்ளார். தமன் இந்த் படத்தின் பெரிய பலம் என்று கூறியுள்ளார். 

மற்றோரு நபர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல ஹாரர் த்ரில்லர் பாத்த உணர்வு என்று பதிவிட்டுள்ளார்

சப்தம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் நம்பிக்கைக்குரிய கதையோடும் மனதைக் கவரும் இடைவேளைக் காட்சியுடன் தொடங்குகிறது. இரண்டாம் பாதி சற்று விகாரமாகவும் சில நேரங்களில் இழுவையாகவும் மாறினாலும், படம் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த கருத்தையும் பாராட்டத்தக்க முயற்சியையும் முன்வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.