தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஒரு இயக்குநராக விளங்கியவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை என விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமீப காலமாக முழு நேர நடிகராக மட்டுமே இருந்து வரும் எஸ்.ஜே. சூர்யா ஏராளமான திரைப்படங்களின் வில்லனாக புதிய பரிணாமத்தில் கலக்கி வருகிறார்.
சிம்புவுக்கு கம் பேக்:
அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சிம்புவிற்கு இப்படம் ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக கம் பேக் கொடுத்தது. டைம் லூப் கான்செப்ட் கொண்ட திரைக்கதையில் சிறப்பான நடிப்பால் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது.
பிஸியான நடிகர் - இயக்குநர் :
இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடித்து அப்படமும் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்திற்கு பிறகு 'கஸ்டடி' படத்தை இயக்கி அப்படமும் வெளியாகிவிட்டது. அடுத்ததாக அவர் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தையும் இயக்குவதற்கான பணிகளையும் மும்மரமாக மேற்கொண்டு வருகிறார்.
வரலக்ஷ்மிக்கு லேட் ரெஸ்பான்ஸ் :
இந்த நிலையில் மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பிற்காக சிம்புவையும், எஸ்.ஜே. சூர்யாவையும் பாராட்டி 'மாநாடு' படத்தின் டைட்டில் கார்டு வீடியோவில் சிம்புவுக்கு ரசிகர்கள் எழுப்பிய உற்சாகமான வீடியோவையும் போஸ்ட் செய்து இருந்தார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரலட்சுமியின் அந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. "இந்த ட்வீட்டை நான் எப்படி தவற விட்டேன் என தெரியவில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள். நன்றி" என பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாட்களுக்கு பிறகு லேட் ரெஸ்பான்ஸ் கொடுத்த எஸ்.ஜே. சூர்யாவை உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சார் என பங்கமாக கமெண்ட் மூலம் கலாய்த்து வருகிறார்கள் இணையதள வாசிகள்.