சர்வதேச அளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை போலவே சரிசமமான கௌரவம் மிக்க விருது கோல்டன் குளோப் விருது. சிறந்த பாடலுக்காக 'நாட்டு நாட்டு...' கோல்டன் குளோப் விருதை கைப்பற்றிய ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உக்ரைன் நாட்டில் படமாக்கப்பட்ட அந்த பாடலின் நினைவுகளை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறார்கள். 


ஆங்கில மொழி இல்லாத திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் என இரு பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளின் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அந்த வகையில் 'நாட்டு நாட்டு...' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவில் விருதை வென்றது. இந்த பாடலில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரின் நடனம் மற்றும் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசை எந்த அளவிற்கு ரசிகர்களின் பாராட்டை பெற்றதோ அதே போல பாடல் இடம்பெற்ற அந்த லொகேஷனும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.  


 



'நாட்டு நாட்டு' பாடல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் ஒரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் அது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வீட்டின் முன்பு படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று உக்ரைனுக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தோடு ஏற்பட்ட கனெக்ட் இன்று கோல்டன் குளோப் விருது வரை வலுவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் காணொலி மூலம் தெரிவித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. 






 


உக்ரைன் போர் தொடங்கிய பின்னர்தான் இந்த பாடலின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்றது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உக்ரைனுக்கு படப்பிடிப்பிற்காக செல்வது பற்றி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தனர். படப்பிடிப்பு முடிந்து திரும்பிய சில மாதங்களுக்கு பிறகு தான் உக்ரைன் போர் தீவிரத்தை பற்றி நாங்கள் தெரிந்து கொண்டோம். நாட்டு நாட்டு பாடல் குறித்து எஸ்.எஸ். ராஜமௌலி இந்த தருணத்தில் இதை நினைவு கூர்ந்தார்.