நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.


ரிஷபம்


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். போட்டிகள் நிறைந்த நாள். 


மிதுனம்


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.


கடகம்


எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதுவிதமான உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான அனுபவமும், புரிதலும் உண்டாகும். கலகலப்பான பேச்சுகளின் மூலம் நட்பு வட்டம் மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


சிம்மம்


தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.


கன்னி


கலகலப்பான பேச்சுக்களின் மூலமாக சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.  பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.


துலாம்


கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செல்வத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.


விருச்சிகம்


மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்.


தனுசு


தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


மகரம்


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகி நிறைவுபெறும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் போட்டி அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். ஆசைகள் நிறைவேறும் நாள்.


கும்பம்


வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


மீனம்


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.