தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜீனியர் என்.டி.ஆர், அலியா பட் ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட படம்  ‘ஆர்.ஆர்.ஆர்’.


 உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. அண்மையில் ஜப்பானில் வெளியான இப்படம் அங்கும் நல்ல  வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது. 






இந்நிலையில், முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகுபலி படம்போலவே இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் வெளிநாட்டில் நடப்பதுபோல் அமைக்கப்படலாம் என ராஜமெளலியின் தந்தையும், இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் கே,வி.விஜேந்திர பிரசாத் முன்னதாக தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


கே,வி.விஜேந்திர பிரசாத் அளித்துள்ள இந்தத் தகவல் ராஜமெளலி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  பாராட்டியுள்ளார்.






கோவாவில் இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், இந்திய சினிமாவின் உண்மையான சக்தியை ஆர்.ஆர்.ஆர் படம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.