ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தின் ராம் சரணின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . ராம் சரண் "அல்லூரி சீதாராமா ராஜு " கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் 1920யில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும் , ஜூனியர் NTR கோமாரம் பீமா நடிக்கிறார்கள் .
ராம் சரணின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரின் முதல் லுக் வெளியானது . ‘துணிச்சல், மரியாதை மற்றும் நேர்மை. அதையெல்லாம் வரையறுத்த ஒரு மனிதன்! அல்லூரி சீதா ராமராஜுவின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது எனது பாக்கியம்’ என்று ராம் சரண் கூறியுள்ளார் .ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரர் ராம் சரணின் புதிய போஸ்டர் லுக்கைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர் தைரியமானவர், அவர் நேர்மையானவர், அவர் நீதிமான்" என்று குறிப்பிட்டு இருந்தார் .

He's brave.
He's honest.
He's righteous.
Here’s my brother @AlwaysRamCharan in his fiercest avatar as #AlluriSitaRamaraju... 🔥#RRR #RRRMovie @ssrajamouli @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/vZISd66yCQ
— Jr NTR (@tarak9999) March 26, 2021

பெரும் பொருட்செலவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள் . பாலிவுட் நடிகை அலியா பட் சீதாவாகவும் மற்றும் ராம் சரணின் ஜோடியாக நடிக்கிறார். ஜூனியர் NTR கோமாரம் பீம் ஒலிவியா மோரிஸின் ஜெனிபிர் ஜோடியாக நடிக்கிறார்கள் . ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு அஜய் தேவ்கன் குருவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 13 திரைப்படம் வெளியாக உள்ளது .