நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு நட்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலில், தமிழ் மொழிக்கான பாடலை அனிருத் பாடியுள்ளார்.


‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில்,  ‘ஆர்.ஆர்.ஆர்.,’  என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான வேலைகளில் ராஜமௌலி மும்முரமாக உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாக உள்ளது. டப்பிங் பணிகள், இரண்டு பாடல் காட்சி பணிகளில் இயக்குநர் ராஜமௌலி பிஸியாக இருந்து வருகிறார்.




இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு நட்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய  5 மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழிக்கான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின் கடைசி நேரத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இடம்பெற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். மரகதமணி இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.






தெலுங்கில் பாடகர் ஹேமச்சந்திரா, மலையாளத்தில் விஜய் யேசுதாசும் பாடியுள்ளனர். கன்னடத்தில் யாசின் நிசரும், ஹிந்தியில் அமித் திரிவேடியும் பாடியுள்ளனர்.


AYAN SURIYA | ''பள பளக்குற பகலா நீ..'' திரைத்துறையில் கால் பதிக்கும் 'அயன்' பசங்க..!


பாடலின் அனைத்து பதிப்புகளையும் இங்கே பாருங்கள்:


தமிழ் -



 


தெலுங்கு - 



 


மலையாளம்-



 


கன்னடம் -



 


ஹிந்தி-


 



 


 


 


STR |” நன்றி இறைவா !” வைரலாகும் STR -இன் டிவோஷனல் புகைப்படம் ! - “கொரோனா குமார்” அவதாரம் எடுக்கும் சிம்பு!