தியேட்டரில் ரிலீஸான ஆர் ஆர் ஆர்  படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு உலகின் மேற்கு பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணுக்கு இப்படம் மூலம் உலகளவில் பல ரசிகர்கள் கிடைத்தனர்.


ஹாலிவுட் இயக்குநர்கள், திரைக்கதை எழுதுபவர்கள் மற்றும் நடிகர்கள் இயக்குநர் ராஜமெளலியின் படத்தை பெரிதும் பாராட்டினர். தற்போது பான் இந்திய படமாக கருத்தப்படும் இதுஆஸ்கர் விருது பெறலாம் என்று பேசப்படுகிறது.






சிறந்த சர்வதேச  மொழி திரைப்படத்தின் கீழ் இப்படம் நியமிக்கப்பட்டால் ஆஸ்கர் வரலாற்றில் ஆர் ஆர் ஆர் இடம்பிடிக்கலாம்  என்ற கூற்று நிலவி வருகிறது. இன்னொரு பக்கம், விவேக் அக்னிஹோத்ரித்தியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் நியமிக்கப்பட்டால் ஆர் ஆர் ஆர் படம் வெற்றி வாகை சூடுவது சிரமம் என்றும் கூறப்படுகிறது.






இந்தியா இப்படத்தை தேர்வு செய்யாவிட்டாலும், இப்படம் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு போன்ற 
பல பிரிவுகளில் அகாடமி விருதில் சமர்பிக்கப்படலாம். முன்னதாக,  “ ஆர் ஆர் ஆர் படம் நியமிக்கப்படலாம். மேற்கில் உள்ள மக்கள்  இப்படத்தை வேறு விதமாக பார்க்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஆர் ஆர் ஆர் படத்தை ரசிக்கவும் செய்கின்றனர். 99% சதவீதம் இப்படம் ஆகாடமி விருதினை பெறலாம். காஷ்மீர் ஃபைல்ஸ் படம் தேர்வு செய்யப்படாது என்றும் எதிர்ப்பார்க்கிறேன்." என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார்.


ஜுனியர் என்.டி.ஆர் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெறலாம் என்று பேசப்படுகிறது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம்  1100 கோடி வசூலை குவித்தது  என்பது குறிப்பிடதக்கது.