Gold Silver Price : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா?

ஒரு கிராம் வெள்ளியின் விலை, கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73900.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Continues below advertisement

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.4465க்கும், சவரனுக்கு ரூ.35720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4824 க்கும், சவரன் ரூ.38432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

Date சுத்த தங்கம் (24 கேரட்) ஸ்டாண்டர்ட் தங்கம்  (22 கேரட்)
1 grm 8 grm 1 grm 8 grm
02/ஜூலை /2021 4824.00 38592.00 4465.00 35720.00
01/ஜூலை /2021 4804.00 38432.00 4445.00 35560.00
30/ஜூன் /2021 4765.00 38120.00 4406.00 35248.00
29/ஜூன்/2021 4789.00 38312.00 4430.00 35440.00
28/ஜூன்/2021 4799.00 38392.00 4440.00 35520.00
27/ஜூன்/2021 4804.00 38432.00 4445.00 35560.00

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73900.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..! 

தங்கம் விலை:   தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ABP நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்

Tamil Nadu NEET 2021 | ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் மாணவி மனு..!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola