ரவுடி பேபி சூர்யா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கவர்ச்சியும், டிக்டாக்கில் அவர் செய்த புரட்சியும் தான். உலக பேமஸ் ஆக வேண்டும் என்று அவர் செய்த அட்டூழியம் ஏராளம். பல டிக்டாக் நண்பர்களுக்கு கனவு கன்னியும் இவர் தான்.. கெட்ட வார்த்தைகளை அடுக்கி தண்ணி காட்டுபவரும் இவர் தான்..


யார் இந்த ரவுடி பேபி சூர்யா என்று கேட்டால் " சூர்யா மாமாக்கு ஒரு உம்மா கொடு" என்று டிக்டாக் சூப்பர் ஸ்டார் ஜிபி முத்து வார்த்தை, வானம் எங்கும் எதிரொலிக்கும். அப்படிப்பட்ட ஆசை வார்த்தைக்கு பெயர் போனவர் என்றாலும், இவர் மீது கடந்த 2 ஆண்டுகளில் வழக்குகள் வாரி குவிந்து வருகின்றனர். அரைகுறை ஆடைகளுடன் இவர் செய்த சேட்டையால் கட்டிய கணவர் ஜகா வாங்க, மதுரை சேர்ந்த சிக்கா மஜாவாக புது புருஷன் ஆனார். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த காதல் தற்போது மோதலாகி புனித காதல் தற்போது புஸ் ஆனது. 


இந்தநிலையில் இவர்கள் பிரிவின்போது வெளியிட்ட வீடியோவில் பெரும்பாலும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், சிலர் மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த வந்தது , இவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் இதற்கு முன் கோரிக்கை வைத்து வந்தநிலையில், ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்கா மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் பெறப்பட்டது. 


அதன் அடிப்படையில், மதுரை விரைந்த கோவை போலீசார், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது முன்னாள் காதலன் சிக்காவை கைது செய்து தற்போது கோவை அழைத்து வருகின்றனர். 


ரவுடி பேபிக்கு கைது, புகாரெல்லாம் புதிதல்ல... இதற்கு முன் அவர் சந்தித்த சர்ச்சைகளும், வழக்குகளும் இதோ...


* கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்ற சூர்யா கொரோனா லாக்டவுன் காரணமாக சில மாதங்கள் அங்கு தங்கியிருந்தார். மீண்டும், திருப்பூர் வந்த அவர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தனிமை படுத்தப்படவில்லை என்றும் சூர்யா மீது வழக்கு போடப்பட்டது. 


* டிக்டாக்கில் வலம் வரும் பெண்களை ஆசை வார்த்தை கூறி சிங்கப்பூர் மலேசியா அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போடப்பட்டது. 


*  சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஜெனிபர் தனம் என்ற பெண்ணும், 10 க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து ரவுடி பேபி சூர்யா ஆன்லைனில் ஆபாசமாக பேசுவதால் எங்கள் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்று தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 


* ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா இணைந்து ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்வதாக கூறி  இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 


* ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எம்.கே.முகைதீன் என்பவர் புகார் அளித்தார். 


* கடந்த 2020, ஜூலை மாதம் சூர்யா தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றதாக திருப்பூர் காவல்துறையினர் அவர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண