’நம்மை நாமே பார்த்துகொள்வது கடவுளே நம்மை பார்த்துக்கொள்வது போல்’ என்று இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
சமீப காலமாகவே செல்வராகவனின் ட்வீட் 'இரண்டாம் உலகம்' வகையறாவாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகத்தை டீகோட் செய்ய முடிந்தவர்களுக்கு நிச்சயமாக செல்வாவின் ட்வீட்களைப் புரிந்து கொள்வது ஈஸி. செல்வாவின் படங்களிலேயே இரண்டாம் உலகம் மட்டும் தான் அப்படியொரு அன்டிஃபைண்ட் ஜானர்.
செல்வாவின் ட்வீட் இதுதான். "வாழ்க்கையில் மிகக் கொடுமை. என்ன பாத்துக்க யாருமே இல்லையே ” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !"
அடுத்தவர்கள் பார்த்துக் கொண்டால் நோயாளி என்று சொல்லியுள்ள செல்வாவை, என்ன ப்ரோ வீட்டுல பிரச்சனையா எனக் கேட்டு ட்விட்டரில் நச்சரிக்கின்றனர் நெட்டிசன்கள்.
போன மாதமும் செல்வா ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம் என்று கூறியிருந்தார்.
அதற்கு முன்னதாக டிசம்பர் 24ல் அவர் பதிவிட்ட ட்வீட்டில், முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடங்கலாய் இருப்பது “ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் “ என்ற நினைப்புதான். சிறிதோ பெரிதோ எந்த காரியத்தையும் உடனே முடித்து விடுங்கள். மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவி முன்னேற்றத்தை கண் முன்னால் காண்பீர்கள் என்று கூறியிருந்தார்.
தமிழில் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகன் தொடர்ந்து காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
காதல் கொண்டேன் படத்தில் தனது சகோதரரான தனுஷையும், நடிகை சோனியா அகர்வாலையும் அறிமுகப்படுத்தினார். இதனிடையே சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு இடையே காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செல்வராகவன் தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தத்துவங்களாக உதிர்க்கும் செல்வாவுக்கு என்னதான் ஆயிற்று என்று அவரது ரசிகர்களின் விடை தெரியா கேள்வியாக உள்ளன.