கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் மணிக்குட்டன் என்பவர் தனது மனைவி சந்தியா மற்றும் மகன் அஜீஷ், மகள் அமேயா ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களுடன் சந்தியாவின் அத்தை தேவகி என்பவரும் வசித்து வந்தார். அத்திங்கல் பகுதியில் மணிக்குட்டன் சிறிய அளவில் ஹோட்டல் நடத்தி வந்தார். 


இதனிடையே ஹோட்டல் தொழிலில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அவர் நிறைய பேரிடம் கடன் பெற்று குடும்பத்தை கவனித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஹோட்டலுக்கு வந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் உணவு சுகாதாரமாக இல்லை எனக் கூறி ஹோட்டலை மூடி சீல் வைத்ததோடு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர். 


ஏற்கனவே கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் ஹோட்டலையும் மூடச் சொன்ன சம்பவம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இனி என்ன செய்ய போகிறோம் என தெரியாமல் திகைத்து நின்ற அவர் விரக்தியில் தற்கொலை முடிவை கையில் எடுத்ததாக தெரிகிறது.


இதற்கிடையில் நேற்று காலையில் ஹோட்டலை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் ஊழியர் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். 


அப்போது மணிக்குட்டன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி சந்தியா, மகள் அமேயா, மகன் அஜீன், அத்தை தேவகி ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இந்த தற்கொலை பற்றி தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடன் பிரச்சினை,ஹோட்டலுக்கு சீல் ஆகிய காரணங்களால் மணிக்குட்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண