பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு ஓடிய மோசடி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜூ நகர் 11வது தெருவை சேர்ந்தவர் 65 வயதான இந்திராணி, இவரது மகன் ஹரி சோழிங்கநல்லூரில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவன இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே விவாகரத்தான இவர் 2வது திருமணம் செய்ய முடிவு செய்து அதற்காக, மேட்ரிமோனியனில் வெப்சைட்டிலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை தேர்வு செய்தார்.


பின்னர் இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால் பெற்றோர் சம்மதத்துடன், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அக்டோபர் 25ம் தேதி திருநின்றவூரில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களில், தனது கணவர் ஹரியிடம், "இனிமேல் உங்கள் மாத சம்பளத்தை என்னிடம்தான் தர வேண்டும் என்று கேட்டாராம். மேலும், ‘உங்களது சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது' என்றும் கேட்டுள்ளார். அன்பு மனைவிதானே என்று நினைத்து தனது சொத்து மற்றும் சம்பளத்தை மனைவி சத்யாவுடன் கொடுத்துள்ளார் ஹரி. நாட்கள் செல்ல செல்ல, சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.


மேலும் “சொத்துக்களை என் பெயரில் எழுதி வை' என்று ஹரியை, சத்யா டார்ச்சர் செய்துள்ளார். உன் பெயரில் சொத்து எழுதி வைக்க பதிவுத்துறை அலுவலகத்துக்கு, ஆதார் கார்டு, கல்விச்சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகிறது. அதை கொடு சொத்தை மாற்றி கொடுக்கிறேன் என்று சத்யாவிடம், ஹரி கேட்டாராம். ஆனால், அதற்கு சத்யா அந்த ஆவணங்களை தர மறுத்துவிட்டார். சந்தேகமடைந்த ஹரி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சத்யாவை தேடியபோது ஆந்திராவில் தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் அவரை கடந்த 28ம் தேதி சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போதுதான், சத்யா ஏற்கனவே ரவி என்பவரை திருமணம் செய்ததும் 2 மகள்கள் இருப்பதும், அந்த மகள்களுக்கும் திருமணமாகிவிட்டதும் தெரியவந்தது.




இதையடுத்து ரவி மற்றும் அவரது மகன்களை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், ரூ. 10 லட்சம், 10 பவுன் நகைகள் பெற்று கொண்டது தெரிந்தது. மேலும் சுகுணா, சத்யா, சரண்யா என பெயரை மாற்றி மாற்றி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் மேட்ரி மோனியில் விவகாரத்தானவர் என்று வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தான் முதல் கணவர் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகையை பறித்துவிட்டு முதல் கணவர் என்று கூறப்படும் சுப்பிரமணி வீட்டுக்கு சென்றுவிடுவாராம். இந்த மோசடி ஐடியா அனைத்தும் சுப்பிரமணியின் ஏற்பாட்டில் நடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்நிலையில் ஹரியின் புகாரின் அடிப்படையில் சத்யாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண