MR.மதுரை பட்டத்தை தட்டிசென்ற செல்லூரை சேர்ந்த முத்துச்செல்வம்.. மேடையிலயே முத்தமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்திய மனைவி- மக்கள்.
மதுரையில் ஆணழகன் போட்டி
மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக 37 வது ஆண்டு மதுரை ஆணழகன் போட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் கே.கே.நகர், பைபாஸ், செல்லூர், மேலூர், கோரிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்து பங்கேற்றனர். இவர்களுக்கு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டது. 40 கிலோ, 50, கிலோ, 65 கிலோ, 80 கிலோ உடல் எடை பிரிவில் உள்ள ஆணழகன்கள் கட்டழகை காட்டி போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களது கட்டுடுலை நடுவர்களின் உத்தரவின்படி செய்து காட்டினர். ஒவ்வொரு சுற்றுகளிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டு பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிச்சுற்று நடைபெற்றது. அப்போது போட்டியில் கலந்துகொண்ட நபர்களின் பெண்கள் குடும்பத்தினர் கைதட்டி விசில் அடித்து ஆரவாரத்துடன் உற்சாக மூட்டினர்.
சாம்பியன் ஆப் சாம்பியன்
இறுதி சுற்றில் உடற் கட்டமைப்பை பெரிய அளவில் , கட்டுடல் இருந்து சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மதுரை செல்லூரை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவருக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் என்ற MR. மதுரை பட்டத்தை தட்டிசென்றார். அவருக்கு 50ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய பாலமுருகன் என்பவர் 2 ஆம் பரிசையும், நாகராஜன் என்பவர் 3ஆம் பரிசையும் தட்டிச்சென்றனர். முதல் பரிசை பெற்ற முத்துச்செல்வத்தை போட்டி தொடங்கியது முதலாகவே அவரது மனைவி மற்றும் மகன்கள் குடும்பத்தினரும் தொடர்ச்சியாக ஆசுவாசப்படுத்தி உற்சாமூட்டி வந்த நிலையில் முதல் பரிசைபெற்றபோது அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நடிகர் ரோபா சங்கர்
முன்னதாக இந்த ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரோபா சங்கர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினருக்கான பிரிவில் தனது கட்டுமஸ்தான உடல் பாவனைகளை செய்துகாட்டி அசத்தினர். முன்னதாக இதற்காக வார்ம் அப் செய்து உடலில் ஆயிலை தடவி தயாராகிய ரோபா சங்கர் மேடையில் திறமையை வெளிப்படுத்தியபோது அவரது மகள் மற்றும் மனைவி உள்ளிட்டோரும் உடனிருந்து உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு பார்த்து ரசித்து சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதனிடைய சிலர் போட்டியின் போது கூச்சலிட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட டத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த செய்தியாளர் ஒருவருக்கு கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரோபா சங்கர்,"பாடி பில்டிங்கில் இருந்து தான் என்னுடைய வாழ்கையை தொடங்கியது. கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி செய்யாமல் படுத்த படுக்கையில் இருந்தேன். இன்று அதை உடைத்து தன்னம்பிக்கையோடு ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன். மருத்துவரின் அறிவுரைகளால் ஓரளவிற்கு என்னுடைய உடலை தேற்றி கொண்டு மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர் என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளேன். படுத்த படுக்கையில் இருந்தால் சிலர் மனது நொந்து தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். எனவே மன உறுதியாகவும், தன்னபிக்கையோடும் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள். 1997 மிஸ்டர் மதுரை, 1998 மிஸ்டர் தமிழ்நாடு உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளேன்.
நடிகர் கமல்ஹாசன் சொன்னது போல் உடற்பயிற்சியும், உணவும் சரியாக இருந்தால் உடல் சரியாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கின்றேன்.
உலகளவில் பாடி பில்டிங் பற்றி பேசப்படவில்லை என்றாலும் விளையாட்டுத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது மன வருத்தமாக உள்ளது. தமிழர்கள் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள். எனவே பாடி பில்டிங் - கையும் ஒலிம்பிக்கில் சேர்த்தால் அதையும் வென்று வருவார்கள். தற்போது பட வாய்ப்புகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. சிரிப்புதான் மிகப்பெரிய மருந்து. அதை என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனக்கு கொடுத்து வருகிறார்கள். நான் மற்றவர்களுக்கு மேடையில் கொடுக்கிறேன். நாம் சிரித்தால் நாம் அழகாக இருப்போம், மற்றவர்களை சிரிக்க வைத்தால் நாம் எல்லோருக்கும் அழகாக இருப்போம். சிரிப்பு என்னும் மருந்து தான் என்னை காப்பாற்றியது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறார் ரோபோ சங்கர்” என்றார்.