விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் நாள் தொடங்கி இன்று வரை மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நகர்ந்து வருகிறது. அதில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டர். சீசன் ஆரம்பித்த போது, ஏராளமான ஃபேன் ஃபாலோவர்கள் கொண்ட ஒரு போட்டியாளராக மிகவும் பிரபலமான ஒரு போட்டியாளராக கருதப்பட்டவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். ஆனால் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை முறையாக பயன்படுத்தவில்லை. மற்றொரு போட்டியாளரான ரச்சிதாவின் பின்னால் சுற்றுவதையே அவர் முழு நேர வேலையாக பார்த்து வந்தார். 


 



ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் :


குறைந்த வாக்கு எண்ணிக்கையால் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் ரச்சிதாவுக்கும் இவருக்கும் இடையேயான உறவு குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்தார். " எங்கள் இருவருக்கும் நடுவில் இருப்பது நட்பு மட்டுமே. வெளியில் இருந்து பார்க்கும் போது வேறு மாதிரி தோன்றி இருக்கலாம் ஆனால் அது வெறும் நட்பு மட்டுமே. அவள் தனிமையில் இருந்த போது நான் சென்று பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பை வளர்த்து கொண்டோம்" என்ற உண்மையை உடைத்தார். 


 







விக்ரம் அப்படிதான் :


விக்ரம் குறித்து ராபர்ட் மாஸ்டர் கூறுகையில் " வீட்டில் இருப்பவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே விக்ரமின் வேலை. அந்த குறைகளை கண்டுபிடித்து தனக்கு சாதகமாக அதை பயன்படுத்தி கொள்வார். நான் விரைவில் வீட்டில் என்ன நடந்தது என்பதை குறித்து தெளிவாக சொல்கிறேன்" என கூறியுள்ளார். 


மேலும் இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அசிம். ராபர்ட் மாஸ்டரின் வெளியேற்றத்தால் மிகவும் கலங்கி போய் உள்ளனர் குயின்சி மற்றும் ரச்சிதா. இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் நடைபெற்றதில் ரச்சிதா, குயின்சி, மைனா நந்தினி, கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் . அசிம் ஹவுஸ் கேப்டன் என்பதால், அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த வாரம் ஏவிக்ஷனில் அவர் இருந்து காப்பாற்றப்பட்டார்.