மலையாளத்தில்  ‘ஜோஜு ஜார்ஜ்’ நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம்  ‘ஜோசப்’. இந்தப்படம் தற்போது தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். ப்ரஸ் ஷோ முடிந்து பரபரப்புடன் நின்று கொண்டிருந்தவரிடம் படம் குறித்தான கேள்விகளை முன்வைத்தேன். 


இயக்குநர் பாலா இந்த கேரக்டரில் நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று சொன்னபோது உங்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது? 


மலையாளத்துல ‘ஜோசப்’  படத்துக்காக  ஜோஜு ஜார்ஜூக்கு நேஷனல் அவார்டு கிடைச்சுருந்துச்சு. அதனால பாலா அண்ணன் நான்தான் இந்தக் கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னப்ப கொஞ்சம் பயமா இருந்துச்சு. படத்துல 3 வேரியேஷன்ல வர்றேன். இதுல எனக்கு என்ன ப்ளஸ்- னா 3 வருஷம் டைம் இருந்துச்சு.



                                                           


அதனால் என்னோட எடையில இருந்து 36 கிலோ எக்ஸ்டாரா வெயிட்  போட்டேன்.. அதுக்கப்புறமா ஒரு 6 மாசம் டைம் எடுத்து ஒரு 30 கிலோ குறைச்சேன். அதுக்கப்புறமா ஒரு 10 கிலோ குறைச்சேன். அப்படித்தான் இந்தக் கேரக்டருக்கு தயார் ஆனேன். பெர்ஃபாமென்ஸை பொருத்தவரை எப்படி பண்ணாலும் நம்மள ஜார்ஜோடத்தான் கம்பேர் பண்ணுவாங்க. அதனால நான் ஜார்ஜை மைண்ட்ல ஏத்திக்கவே இல்ல. என்னோட பாடிலேங்குவேஜ்ல நான் குண்டாயிருந்தா, நான் குடிச்சா, நான் நடந்தா எப்படி இருக்குமோ அத மைண்ட்ல வைச்சுதான் பண்ணேன். 


இந்தப்படத்தை தமிழ் ஆடியன்ஸ் ஏத்துப்பாங்கன்னு எப்படி நம்புனீங்க?


இந்த கண்டெண்ட் யூனிவர்சல் கண்டெண்ட். இந்தப்படம் இந்தி, தெலுங்குல ரீமேக் ஆகப்போகுது. ஆனால் மலையாளத்துல இருந்த மாதிரியே அப்படி இங்க எடுக்க முடியாது. அதனால தமிழுக்காக சில விஷயங்களை மாத்திருக்கோம்.   


பாலா படம் பார்த்துட்டு என்ன சொன்னார்? 


அவர் படம் பார்த்துட்டு 2 மணிநேரம் தியேட்டரை விட்டு வெளியே வரல. அதுக்கப்புறமா வெளியே வந்தாரு. வெளியே வந்த அவரு என்னோட முதுகுல ஓங்கி அடிச்சி தட்டிக்கொடுத்தாரு. என்னொட மனைவிக்கிட்ட இந்தப் படம் அவனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு சொல்லி அடுத்து பண்றதை கவனமா பண்ண சொல்லுன்னு சொன்னாரு.   


பாலாவின் சமீபத்திய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.. அவர் இப்போது எப்படி இருக்கிறார்?


பாலா சாருக்கு நான் புள்ள மாதிரி. அதனால அவரு என்னப் பண்ணுவாரு.. எப்படி யோசிப்பாரு அபப்டிங்கிறதெல்லாம் எனக்கு தெரியும். அவரு இப்ப முழுக்க முழுக்க சூர்யா 41-ல  கவனம் செலுத்திட்டு வர்றாரு. நந்தா, பாலா படங்கள்ல இருந்த பாலாவை இப்ப நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். 



                                                       


தமிழ் சினிமா பிரபலங்கள் இந்தி கற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். இதற்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வருகின்றன.. உங்களின் கருத்து என்ன?


எனக்கு இந்தி தெரியும். தமிழ்நாட்டுக்குள்ள இருக்குறவரைக்கும் நமக்கு எதுவும் தெரியாது. ஹைதராபாத் போனீங்கன்னா அங்க இந்தி நல்லா பேசுவாங்க.. இந்தி தெரியல அப்பன்னா வட இந்தியா பக்கம் போகும் போது நாம கஷ்டப்படுவோம். அதனால் பிறமொழிகளை கற்றுக்கொள்வதென்பது மிகவும் நல்லது. 


                           
                                                  
                                                         


தமிழ்நாட்ல பிறமொழி திணிப்பு இருக்காது. அப்படி இருந்தால் அது தவறு. சினிமாவில் இப்போது எல்லாமே பான் இந்தியா ஆகிருச்சு. அதனால நம்ம தமிழை அங்க கொண்டுபோவோம்.. அவங்க இந்தியை கொண்டுவரட்டும்.. தேசிய மொழி இந்தி. அதுக்கு கொடுக்கிற மரியாதையை அவங்க கொடுக்குறாங்க.. நாங்களும் கொடுக்குறோம். தமிழும் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது. உலகத்தில் அதிக நபர்கள் பேசும் மொழியாக தமிழ் உள்ளதாக சொல்கிறார்கள்.. அது நமக்கு பெருமைதானே.." என்று முடித்தார்