சமீபத்தில் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த லவ் டூடே படத்தின் கதையை அன்றே கணித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.


பிரதீப் ரங்கநாதன் , இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. இப்படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்தது.


தெலுங்கிலும் மாஸ் காட்டிய லவ் டுடே 




தெலுங்கில் வெளியான லவ் டுடே படத்தின் முதல் ஷோவை பார்த்து விட்டு சந்தோஷத்தில் இயக்குநர் பிரதீப்பை தூக்கி அமர்களப்படுத்திய ரசிகர் தொடர்பான வீடியோ வைரலானது. முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்கள் தியேட்டரில் குவிய தொடங்கினர். படத்தை பார்த்து முடித்த ரசிகர்கள் அனைவரும் பிரதீப்பை சூழ்ந்து கொண்டு, அன்பு மழை பொழிந்து வந்தனர்.


லவ் டுடே சந்தித்த சிக்கல்கள் 


ஒருபக்கம் இளைஞர்கள் மற்றும் 2கே கிட்ஸ்களிடையே நல்ல வரவேற்ப்பை இது பெற்று இருந்தாலும், பல சிக்கல்களையும் இப்படம் சந்தித்தது. ஆண் ஆதிக்க கருத்தை உள்ளடகியது போன்ற கருத்துக்களை சினிமா விமர்சகரகளும் சமூக செயல்பாட்டாளர்களும் முன் வைத்தனர். அத்துடன், இப்படத்தை இயக்கிய பிரதீப் யுவனை பற்றியும் நடிகர் விஜயை பற்றியும் முன்னுக்கு பின்னான முரண்பட்ட கருத்துக்களை, ஆரம்பகாலத்தில் பேசியுள்ளார் என்று பெரும் பிரச்சனை எழுந்தது. அதனால், தனது முகநூல் பக்கத்தையே தற்காலிகமாக
வெளியேறினார்.


அன்றே கணித்த ஆர்ஜே பாலாஜி 






கொரோனா காலத்தில், சூர்யா நடித்த படங்களில் உள்ள சில விஷயங்கள் , நிஜ வாழ்க்கையில் நடந்தது. அப்போதிலிருந்து அன்றே கணித்தார் சூர்யா என்று பல பேர் மீம்ஸ் போட்டு வந்தனர். அந்தவகையில், லவ் டுடே படத்தின் கதைக்கருவை ஒரு சிறிய காட்சியாக எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அன்றே உட்புகுத்தியுள்ளார். ஆனால், எல்.கே.ஜி படம் வெளியாவதற்கு முன்னரே லவ் டுடே படத்திற்கு வித்தாக இருந்து அப்பா லாக் என்ற குறும்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது