வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்ய உள்ளார்.
நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்றுக்கு
ஆர் ஜே பாலாஜி கமெண்ட்ரி செய்ய உள்ளார்.
அந்த கமெண்டரியின் போது மதியம் 12.30 மணி அளவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு லைவில் ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
மீடியாவில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடர்ந்தவர் RJ பாலாஜி. ரேடியோவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்த பாலாஜி , அவ்வபோது திரைப்படங்களிலும் தலைக்காட்ட துவங்கினார். சில படங்களில் குரலாக மட்டுமே ஒலித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான எதிர் நீச்சல் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும், இது என்ன மாயம் , காற்று வெளியிடை என பல படங்களில் காமெடியனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் , சத்தியராஜ் , ஊர்வசி காம்போவில் வீட்டுல விசேசம் உள்ளிட்ட படங்களை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.