பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. ஏற்கனவே நடிகர் மஹத்  மாநாடு, மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது Double XL திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளார். 


டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ் மற்றும் ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தயாரித்துள்ள காமெடி கலந்த டிராமா திரைப்படமான Double XL படத்தை இயக்கியுள்ளார் சத்திரம் ரமணி. இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது.உடல் பருமனான இரண்டு பெண்களும் அவர்களின் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் Double XL.






 ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இப்படத்தின் தாழி தாழி... பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இது சிலம்பரசன் பாடும் முதல் ஹிந்தி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.






Double XL திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சிலம்பரசன், வைபவ், ஜெய், இயக்குனர் எஸ் ஜே சூர்யா, நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று கண்டுகளித்துள்ளனர்.











நடிகர் மகத் சிறப்பு காட்சியை காண வந்த சக நடிகர்களுக்கு, ''எனது முதல் ஹிந்தி படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி'' என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.