இயக்குநர்கள் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் துரோகி என்ற படத்தின் மூலம் கவனம் பெற்றாலும், மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இவர் இயக்கிய இறுதிச்சுற்று படம் அனைவரையும் ஈர்த்தது.

குறிப்பாக ரித்திகா சிங்கின் நடிப்பு கோலிவுட்டின் டாபிக்கானது. அதனையடுத்து அவரது திறமை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு தேசிய விருது கிடைத்தது. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ரித்திகா நடித்துவருகிறார். தமிழில், அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

படங்களில் பிஸியாக இருந்தாலும் தனது சமூக வலைதள பக்கங்களிலும் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் ரித்திகா சிங் தனது புகைப்படங்களையும், தன்னை குறித்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதும், அதை ரசிகர்கள் ரசிப்பதும் வழக்கம்.

இந்நிலையில் ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரித்திகாவின் நடனத்தை கண்ட ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Etharkkum Thunindhavan Release: உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்... வெளியானது எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி!