மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும்போது எல்லாம் மக்கள் போராட்டங்களில் இறங்குகிறார்கள். வரலாறு முழுவதும் சர்வாதிகாரத்திற்கு, பாசிசத்திற்கு, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல புரட்சியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். சிலர் அமைதி முறையில் இந்த போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள், சிலர் ஆயுதங்கள் ஏந்தி இந்த போராட்டங்களை வழிநடத்தி இருக்கிறார்கள். சிவாஜி கனேசனின் பராசக்தி காலம் முதல் தமிழ் சினிமாவில் புரட்சி பேசும், ஹீரோக்கள் இருந்து வருகிறார்கள்.


ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் புரட்சி கதாநாயகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா, கபாலி, வெற்றிமாறனின் வடசென்னை, விடுதலை என சில படங்களில் கதாநாயகர்கள் தங்களது மக்களுக்காக போராடுகிறார்கள். 


சமூக மாற்றத்திற்காக போராடும் கதாநாயகர்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறார்கள். பா ரஞ்சித் , வெற்றிமாறன் , மாரி  செல்வராஜ் ஆகிய இயக்குநர்களின் படங்களின் கதாநாயகர்கள் மக்களுக்காக மக்கள் தரப்பின் நின்று குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் . இந்தப்போக்கு தற்போது பிற  இயக்குநர்களையும் கவர்ந்துள்ளது. அந்த மாதிரி தமிழில் வெளியாக இருக்கும் மூன்று படங்களைப் பார்க்கலாம்


கேப்டன் மில்லர்


அருண்  மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து  உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன் , ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டத்தில் உருவான புரட்சி இயக்கத்தை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


ரிபெல்






ஜி.வி பிரகாஷ் குமார்  நடித்து அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கும் படம் ரிபெல். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, டார்லிங் ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் முன்றாவது படம் ரிபெல்


சூர்யா 43 - புறநாநூறு






சுதா கொங்காரா மற்றும் சூர்யாவின் இரண்டாவது முறை கூட்டணியில் உருவாக இருக்கும் படம் சூர்யா 43. துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம்  உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது தற்போதைய நிலையில் புறனாநூறு என்கிற படத்தின் பாதி தலைப்பு மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு.  கல்லூரி மாணவனாக சூர்யா இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அரசியலை மையப்படுத்திய படமாக இந்தப்  படம் இருக்கும் என்று கூறப்படுகிறது