ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 2023 உலகக் கோப்பையில் இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நுழைந்தவுடன் அதிரடியாக ஆட தொடங்கினார். இந்த போட்டியில் தனது முதல் போட்டியிலேயே அபார சதம் அடித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சர்யப்பட செய்தார்.


59 பந்துகளில் சதம்:


நியூசிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்று வரும் போட்டியில் டிராவிஸ் 59 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். அவரது அதிரடியான இன்னிங்ஸ் காரணமாக சிறப்புப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிவேகமாக சதம் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.


இந்த பட்டியலில் க்ளென் மேக்ஸ்வெல் முதல் இடத்தில் உள்ளார். இதே உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 40 பந்துகளில் சதம் அடித்து தனது பழைய சாதனையை தானே மேக்ஸ்வெல் முறியடித்தார். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த சாதனை மேக்ஸ்வெல் பெயரில் இருந்தது. 2015 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 100 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


டிராவிஸ் ஹெட்:


மேக்ஸ்வெல்லுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பால்க்னர் 57 பந்துகளில் சதம் அடித்தார். இப்போது டிராவிஸ் ஹெட் (59) தனது பெயரை நான்காவது இடத்தில் பதிவு செய்துள்ளார்.






இந்த உலகக் கோப்பையில் 3வது இடம்..


உலகக் கோப்பை 2023ல் அதிவேகமாக சதம் அடித்தவர் பட்டியலில் டிராவிஸ் ஹெட் 3வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் மேக்ஸ்வேல் 40 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு பிறகு 49 பந்துகளில் சதம் அடித்து மார்க்ரம் இரண்டாவது இடத்திலும், 59 பந்துகளில் சதம் அடித்து டிராவிஸ் ஹெட் மூன்றாவது இடத்தில் உள்ளார். 






தொடர்ந்து, 61 பந்துகளில் சதம் அடித்து க்ளாசன் 4வது இடத்திலும், 63 பந்துகளில் சதம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5வது இடத்தில் உள்ளார். 


டிராவிஸ் ஹெட் இல்லாமல் தவித்ததா ஆஸ்திரேலியா?


கடந்த செப்டம்பர் மாதம் டிராவிஸ் ஹெட் காயமடைந்தார். இதனால் கடந்த ஒரு மாதமாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறி சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பி கம்பேக் கொடுத்தார். உலகக் கோப்பையின் முதல் ஐந்து போட்டிகளில் ஆஸ்திரேலியா அவரை மிகவும் மிஸ் செய்ததே என்று சொல்லலாம். ஆஸ்திரேலியா அணி தனது தொடக்க ஜோடியின் தோல்வியால் இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததற்கும் இதுவே காரணம். டிராவிஸ் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஜோடி பிரச்சனை தீர்ந்தது.