Ravindhar - Mahalakshmi Interview : நான் ஏன் மஹா மீது எக்ஸ்பிரஸிவாக இல்லை - விளக்கம் கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர்
சன் மியூசிக் சேனலில் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு சீரியல் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் விஜே மஹாலக்ஷ்மி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது தான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
கடுமையான விமர்சனங்கள் :
மஹாலக்ஷ்மி - ரவீந்தர் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வரும் நிலையில் அதற்கு ஏராளமானோர் தங்களது கமெண்ட் மூலம் கிண்டல் செய்தும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் இந்த திருமணம் என்பதால் பல கடுமையான விமர்சனங்களும் வந்த வண்ணமாக உள்ளன.
இன்ஸ்பையரிங் ரோல் மாடல் :
மஹாலக்ஷ்மி - ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சில கருத்துக்களை பரிமாறியுள்ளனர். நீங்கள் ஏன் எக்ஸ்பிரஸிவாக இல்லை என்று கேட்டதற்கு ரவீந்தர் பேசுகையில் " திருமணத்திற்கு பிறகு கமெண்ட் ஒன்றை படித்தேன். யோவ் நீ அந்த பொண்ணு மேல படுத்த அவ்வளவு தான்யா... என்று இருந்தது. இது படிக்கும் பொது வல்கராக தான் இருக்கும் ஆனால் அந்த கமெண்ட் பார்த்த உடனேயே எனக்கு என்ன தோணுச்சுனா அவ என் மேல படுத்த வாட்டர் பெட் மாதிரி இருக்கும். நான் ஏன் எக்ஸ்பிரஸிவாக இல்லை என்றால் என்னை நிறைய பேர் இன்ஸ்பையரிங்காக ஒரு ரோல் மாடலாக பார்க்கிறார்கள். எனது மனைவியை நான் கிஸ் பண்ணுகிறேன். அது இங்கு செய்வது என்னை உயர்வாக நினைப்பவர்ளை நான் அவமதிப்பதாக ஆகிவிடும். அவர்களுக்கு நான் ஒரு கேட்ட உதாரணமாக போய் விட கூடாது என்பதற்காக தான்" என்றார்.
ஒரே வீடியோ ஆல் ஓவர் இந்தியா ரீச் :
மேலும் அவர் கூறுகையில் "நான் சினிமாவிற்கு வந்து சுமார் 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரையில் நான் எடுத்த எந்த ஒரு திரைப்படமும் எங்களின் திருமணம் அளவிற்கு ரீச் ஆகவில்லை. எங்களின் திருமணம் பிச்சுக்கிட்டு வைரலாகிறது. இந்த நியூஸ் இவ்வளவு வைரலாக காரணம் நாங்கள் எங்கள் திருமணம் குறித்த தகவல் வெளிவராமல் பார்த்து கொண்டது தான். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் ஆனால் அதை லீக் ஆகாமல் பார்த்து கொண்டதால் தான் இன்று இது கேரளா, கர்நாடக என ஒரே வீடியோவில் இந்திய முழுக்க ரீச் ஆனதற்கு காரணம்" என்றார் ரவீந்தர்.