Captain Booking Open: ஹாலிவுட் தரத்தில் "கேப்டன்" திரைப்படம்... செப்டம்பர் 8 ரிலீஸ்... புக்கிங் ஓபன்
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா தனது சொந்த தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் "கேப்டன்". டெடி, சார்பட்டா பரம்பரை படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் கேப்டன். இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்மியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள் படக்குழுவினர்.
கேப்டன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் :
"கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்று இரவு முதல் துவங்கியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது திரை ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.
விளம்பரப்பணிகளில் மும்மரம் :
இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும்பாலும் குலு மணாலி, மூணாறு , உதகை போன்ற இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. பெரும் பொருட்செலவில் அதிக நாட்கள் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி. படத்தின் விளம்பர பணிக்காக இப்பட குழுவினர் மிகவும் மும்மரமாக ஈடுபட்டனர். பல இடங்களில் ஆர்யா பங்கேற்று படத்தை விளம்பரப்படுத்தினர்.
படத்தின் இசை ஒரு பிளஸ் பாயிண்ட்:
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். படத்திற்கு இசையமைப்பாளர் இமானின் பாடல்கள் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கேப்டன் திரைப்படம் ரிலீஸ் மற்றும் ராஜா ராணி திரைப்படத்திற்காக தமிழ் நாடு அரசு விருது ஆர்யாவிற்கு வழக்கப்பட்டதில் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் ஆர்யா. இந்த மகிழ்ச்சியான செய்தியை தன் படத்தின் விளம்பரத்திற்காக சென்ற இடத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஆர்யா படத்தின் விளம்பரத்திற்காக செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்கள் அனைவரையும் படத்தினை திரையரங்குகளில் சென்று பார்க்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.