எல்லாமே டிஜிட்டல் மையமாக மாறி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள டிஜிட்டலுக்கு மாறி வருகின்றனர். இந்த டிஜிட்டல் தளங்கள் மூலம் பணமும் வருகிறது என்பதால் இந்த பெரிய சினிமா பிரபலங்கள் தொடங்கி சீரியல் பிரபலங்கள், ஏன் அவரது குழந்தைகள் கூட  என இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அக்கோண்டை ஓபன் செய்து, தங்களின் தினசரி நடவடிக்கைகளை அதில் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.


இந்த வீடியோக்கள் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமந்தா, ரகுல்ப்ரித் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுக்கான யூடிப்பை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


 



 



இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி சார்ந்த பதிவுகளை வெளியிட்டு வந்த, ராஷ்மிகா தற்போது கடந்த ஆண்டு தான் தொடங்கிய யூடியூப் சேனலில் முதல் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், தன்னிடம் கேட்ட  ‘ஏன்’ கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.


 






அந்த வீடியோவில், “ ஏன் நடிக்கிறீங்க என்ற கேள்விக்கு, அது நான் என்னையே கண்டுபிடிக்க உதவுகிறது என்கிறார். ஏன் ட்ராவல் நிறைய பண்றீங்க என்று கேட்க, ஏன்னா எனக்கு மெமரிகளை சேகரிக்க ரொம்ப பிடிக்கும் என்கிறார். இவைத் தவிர நான் Desert வகை உணவுகளை சாப்பிடுவது ஏன், வொர்க் அவுட் செய்வதும் ஏன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.