மக்களுக்கு பிடிக்கும் வகையிலான, நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதில் விஜய் டிவி எப்போதுமே, அதன் முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலக்கட்டங்களில் விஜய் டிவி தயாரித்து வழங்கிய கலக்கப்போவது யாரு, லொள்ளு சபா, ஜோடி நம்பர் 1, காஃபி வித் அனு, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே மக்களை நல்ல வரவேற்பை பெற்றன. இவை அடுத்தடுத்த சீசன்களாகவும் வெளிவந்தன. 


இதையடுத்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, காஃபி வித் டிடி, நீயா நானா, கோடீஸ்வரன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் விஜய் டிவியின் ஹிட் பாக்ஸில் இணைந்தன. அந்த ஹிட் சக்ஸஸ் ஹிட் ரூட்டை அப்படியே பிடித்து விஜய் உருவாக்கியிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. ஏற்கனவே பார்த்த சமையல் நிகழ்ச்சி என்றாலும், அதில் ஒரு கோமாளியை அதில் புகுத்தி காமெடியை  சமையலோடு சேர்த்து கொடுக்க, நிகழ்ச்சி தற்போது எகிடுதகிடு ஹிட். அதில் கலந்து கொண்ட சிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர்  தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றன. 


இந்த நிலையில் நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்சியமாக்க, அடுத்த அப்டேட்டாக சினிமா பிரபலங்களை நிகழ்ச்சியினுள் கொண்டு வந்து நிகழ்ச்சிக்கு ஒரு பக்கம் மார்க்கெட்டை ஏற்றி, படத்திற்கான பிரோமோஷனுக்கு பிரோமோஷனை செய்யவும் கணக்கு போட்டியிருக்கிறது.


அந்த வகையில் அண்மையில் வெளிவந்த ஹே சினாமிகா படத்தை பிரோமோட் செய்யும் விதமாக, நடிகர் துல்கரும், அதிதி ராவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.





அந்த நிக்ழ்ச்சியின் பிரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், துல்கர் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி படத்தில் நித்யா மேனனும் துல்கரும் அறிமுகமாகும் சீனிற்கு, துல்கர் ஒரு பக்கம் நடிக்க, அந்தப்பக்கத்தில் நித்யா மேனனுக்கு பதிலாக சிவாங்கி நடித்தார். தொடர்ந்து பைக்கில் சிவாங்கியை ஏற்றிய துல்கர், செட்டுக்குள்ளும் ஒரு ரவுண்ட் அடித்தும் விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.