பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வின் ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர, ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு ( Joint Entrance Examination) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், என்ஐடி உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்வு ஆகும் மாணவர்கள் ஐஐடிகளில் சேர்ந்து படிக்கத் தகுதி ஆனவர்கள் ஆவர்.
தேர்வு எப்போது?
2024ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வுக்கான தேர்வின் முதல் தாள் Paper 1 (BE/ BTech) ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் தாள் (BArch and BPlanning) ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது.
ஜனவரி மாத JEE Main தேர்வுக்கு 12.3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடைபெறும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெற உள்ளது.
டிசம்பர் 4 வரை விண்ணப்பப் பதிவு
ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நவ. 2ஆம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் அமர்வுக்கான இரண்டு தாள்களுக்கும் அனுமதிச் சீட்டு இன்று வெளியாகி உள்ளது.
இதைக் காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://jeemain.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/admit-card என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* இந்த இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
* சப்மிட் பொத்தானை அழுத்தி, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை என்ன?
JEE மெயின் தேர்வின் 2ஏ தாள் 82 கேள்விகளைக் கொண்டது. இதில் 50 பொதுத் திறன்பொதுத் திறனில் 50 கேள்விகள், கணிதத்தில் 30 கேள்விகள், ஓவியத்தில் 2 கேள்விகள் கேட்கப்படும். தாள் 2பி-ல், பொதுத் திறனில் 50 கேள்விகளும், கணிதத்தில் 30 கேள்விகளும், திட்டமிடலில் 25 கேள்விகளும் கேட்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொலைபேசி எண்: 011- 40759000