திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வது, ரிலேஷன்ஷிப்பில் இருப்பது என்பது காலகாலமாக இருந்து வரும் ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் இப்படி ஒரு காதல் கிசுகிசு சோசியல் மீடியா எங்கும் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் - நடிகை ராஷ்மிகா மந்தனாதான் அந்த லேட்டஸ்ட் கிசுகிசுவில் சிக்கிய ஜோடி.
ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி :
பெங்களூருவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தனது அழகான வசீகரமான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களின் இதய துடிப்பாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்றது. அப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மவுசு மேலும் மேலும் கூடியது. புஷ்பா படத்தின் மூலம் அது இரட்டிப்பானது என்றே சொல்ல வேண்டும். தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராஷ்மிகா சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். வாரிசு படத்தில் ராஷ்மிகா ஸ்கோர் செய்ய வாய்ப்புகள் இல்லையென்றாலும் இளைய தளபதியுடன் நடித்துவிட்டால் தமிழிலும் முன்னணி நடிகையாகி விடலாம் என அப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
ராஷ்மிகா பாலிவுட்டிலும் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி அனைத்து மொழி படங்களிலும் களம் இறங்கி கலக்கும் ராஷ்மிகா இளைஞர்களின் நேஷனல் க்ரஷாக இருந்து வருகிறார்.
காதல் கிசு கிசு உண்மையா?
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் - ராஷ்மிகா இருவருக்கும் இடையில் காதல் என கிசுகிசு செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது. சமீபத்தில் ஒரு பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், சுப்மன் கில் பற்றின கிசு கிசு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா மிகவும் கூலாக கண்ணடித்து சிரித்தபடி ஆம் என கையில் ஹார்ட் காட்டி சென்றுள்ளார். இதற்கு பிறகு கிசுகிசு சும்மா சூறாவளி போல இணையத்தை கலக்கி வருகிறது. ஆனால் அதை உண்மை என சொல்லவில்லை