ராஷ்மிகா மந்தனா ரசிகர் ஒருவருக்கு ப்ரோபோஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகருக்கு ப்ரோபோஸ் செய்த ராஷ்மிகா
வைரலான இந்த வீடியோவில், ராஷ்மிகா ஒரு ரசிகருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் போது மற்றொருவர் அருகில் நின்று, தெலுங்கில் ஒரு பெண்ணுக்கு எப்படி ப்ரோபோஸ் செய்வது என்று ரசிகர் ஒருவர் கேட்க, கேள்வியைக் கேட்ட ராஷ்மிகா சிரித்துக்கொண்டே ரசிகரிடம், “ஏய் ஹாய்... யாரது?” என்று திரும்பி பார்த்து கேட்பதைக் காணலாம்.
அதன் பின்னர் ராஷ்மிகா தெலுங்கில், "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு", என்று கூறுகிறார். இதற்கு அந்த ரசிகர், "சேம் டு யூ" என்று பதிலளிக்க, ரசிகரின் எதிர்பாராத பதிலைக் கண்டு ராஷ்மிகா ஒரு நிமிடம் அதிர்ந்து பின்னர் சிரித்துவிட்டார்.
விஜய் தேவரக்கொண்டாவை டேக் செய்யும் ரசிகர்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் விஜய் தேவரகொண்டாவை டேக் செய்து இதையெல்லாம் கவனிக்கிறீர்களா? என்ற தொனியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில், ரஷ்மிகா மந்தனா துபாயில் தனது குடும்ப விடுமுறையில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த செவ்வாயன்று விஜய் தேவரக்கொண்டா தனது பெற்றோருடன் மகிழ்ச்சியான விடுமுறையில் இருப்பது தெரியவந்தது. பயணத்தின் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.
காதல் வதந்தி
பின்னர் விஜய் தேவரகொண்டா தனது நண்பர்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வந்தன. ஆனால் அதன் பின்னர்தான் ஒரு ரசிகர் ராஷ்மிகாவும் அவர்களோடு இருப்பதை புகைப்படம் எடுத்து பதிவேற்றினார். அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்ட பிறகு இருவருக்கும் காதல் என்று பல வதந்திகள் வழக்கம்போல கிளம்ப ஆரம்பித்துள்ளன.
பேமிலி ட்ரிப்பில் ராஷ்மிகா?
ஆன்லைனில் பரவும் ஒரு புகைப்படத்தில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் இருக்கும் படங்களில் அணிந்திருந்த அதே ஆடையை அணிந்து, ராஷ்மிகா உடன் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பது போன்ற ஒரு ஒருகைப்படம் வெளியானது. அதை வைத்தே குடும்ப ட்ரிப்பில் ராஷ்மிகாவும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் ராஷ்மிகாவின் டேட்டிங் வதந்திகள் நீண்ட நாட்களாகவே தலைப்புச் செய்திகளாக இருந்து வருகின்றன. இருப்பினும், இரு நடிகர்களும் தங்கள் காதல் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பல இடங்களில் தங்களுக்குள் நெருக்கம் இருப்பதாக வெளிப்படுத்திய ஜோடி இதுவரை காதல் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.