குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வளர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்படுகிறார். இப்படி ஒரு புறம் இளைஞர்களின் க்ரஷாக இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் அவரை வெறுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. அவர் எது பேசினாலும் அதை ஸ்டேட்மென்ட்டாக்கி அதை சர்ச்சையாக்கி ட்ரோல் செய்து வந்தார்கள். இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்கள் எதற்கும் கலங்காமல் தனது வேலையில் முழு கவனத்தையும் செலுத்தும் ராஷ்மிகா தற்போது கிளாமர் போட்டோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். 


 



வாரிசு வாய்ப்பு எப்படி :


சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் அவரின் ஜோடியாக முதல் முறையாக நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தனது ஃபேவரட் ஸ்டாருடன் நடித்ததை பாக்கியமாக கருதினார். நடிக்க தான் பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் டான்ஸில் விஜய்க்கு சரியான டஃப் கொடுத்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ராஷ்மிகா 'வாரிசு' படத்திற்கு பிறகு தமிழிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 


 






 


நெகட்டிவிட்டி வேண்டாம் பீப்ஸ்:


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்டாக ஸ்டைலிஷ் போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதற்கு கேப்ஷனாக "ஹேப்பியா இருங்க பீப்ஸ்.. நம்பிக்கையுடன் இருங்கள்..
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மகிழ்ச்சியும் அமைதியும் முக்கியம்...
வாழ்க்கை மிகவும் குறுகியது அதனால் நெகட்டிவிட்டிக்கு இடம் கொடுக்காதீர்கள்! " என பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த போஸ்டிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 



கைவசம் ஏராளம் :


பான் இந்திய நடிகையாக தன்னை நிரூபித்து வரும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். ஏற்கனவே அவர் நடித்த 'குட் பை' மற்றும் 'மிஷன் மஜ்னு' இந்தி திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுவிட்டன. அதனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூருடன் இணைந்து 'அனிமல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 படத்திலும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லை என்றாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் ராஷ்மிகா மந்தனா.