புஷ்பா’ படத்தில் ராஷ்மிகாவை விட நான் பொறுத்தமாக இருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த விளக்கத்துக்கு நடிகை ராஷ்மிகா என்ன ரியாக்ட் செய்துள்ளார்.


சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அளித்த பேட்டி ஒன்றில் ”‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்று கூறியிருந்தார். ஐஷ்வர்யாவின் இந்த பேட்டி தொடர்பாக சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பார்க்க முடிந்தது. ஒரு சிலர் இந்த கருத்துக்கு ஆதரவாக கமெண்ட் செய்திருந்த நிலையில், ராஷ்மிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக விமர்சித்து வந்தனர்.


இந்நிலையில், ஐஷ்வர்யா ராஜேஷ் தனது பேச்சு குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தான் உதாரணத்துக்காக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும், தனக்கு ராஷ்மிகா மீதும் அவரது நடிப்பின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் அறிக்கைக்கு ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 
“ஹாய் அன்பே, இப்போதுதான் இதனை பார்த்தேன். நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை கூறினீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. நம்மைப் பற்றி நாம் விளக்கம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை உங்கள் ‘ஃபர்ஹானா’ படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று கூலாக ரிப்ளை செய்துள்ளார் ராஷ்மிகா. ராஷ்மிகாவின் இந்த டிவிட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






சமீபத்தில் வெளியான பர்ஹானா திரைப்பத்திற்கு ரசிர்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு தரப்பினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில திரையரங்குகளில் படம் திரையிடப்படவில்லை என கூறப்பட்டது. மேலும் ஐஷ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், ஐஷ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய கருத்தும் விவாதப் பொருளானது. இந்நிலையில் ஒருவழியாக ராஷ்மிகாவும், ஐஷ்வர்யா ராஜேஷூம் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.