தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவகள் என  மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் 90.57 சதவீதம் தேர்ச்சி

விழுப்புரம்  மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 12,451 மாணவர்கள், 12,232 மாணவிகள் என 24,683 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,886 மாணவர்கள், 11,470 மாணவிகள் என மொத்தம் 22,365 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.43 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.57% ஆகும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 230 பள்ளிகளைச் சேர்ந்த 7,871 மாணவர்கள், 8526 மாணவிகள்  தேர்வு எழுதி நிலையில், மாணவர்கள் 6619 பேரும், மாணவிகள் 7874 பேரும் மொத்தம் 14,493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.39 ஆக உள்ளது.

Continues below advertisement

Tamil Nadu 10th Result 2023: மாணவ, மாணவியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு காணலாம்.

அதேசமயம் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண